168
ஊடகவியலாளர் சிவராம் கொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் , மீண்டும் மீண்டும் தமது அமைப்பை அந்த கொலை வழக்குடன் சிலர் தொடர்பு படுத்த முயன்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழில்.இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது கருத்து தெரிவிக்கையில் ,
ஊடகவியலாளர் சிவராம் கொலை வழக்குடன் புளொட் அமைப்புக்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த கொலை குற்ற சாட்டு தொடர்பில் எமது அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் தற்போது வழக்கு விசாரணைகளில் இருந்து நிரபராதி என முற்று முழுதாக விடுவிக்கப்பட்டு உள்ளார்.
தொடர்ந்து சிவராம் கொலை வழக்குடன் புளொட் அமைப்புக்கு தொடர்பிருக்கின்றது என குற்றம் சாட்டப்பட்டு வருவதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதனையும் தாண்டி தனிப்பட்ட புளொட் அமைப்பின் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாகவே இந்த குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றது.
நீதிமன்றினால் நிரபராதி என தீர்க்கப்பட்ட பின்னரும் சிவராம் கொலையுடன் புளெட் அமைப்புக்கு தொடர்பு என சிலரும் சில ஊடகங்களும் கூறி வருகின்றது அதனை நாம் முற்றாக மறுக்கின்றோம் என தெரிவித்தார்.
Spread the love