ஹம்பாந்தோட்டை மாகம்புற துறைமுகத்தில், சீனா தனது தேசியக் கொடியை ஏற்றியுள்ளது. இந்தத் துறைமுகமானது, கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி சைனா மேர்ச்சன்ட் போட் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது. இதன் பின்னர் முதற் தடவையாக இன்று சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, அங்கு இலங்கையின் தேசியக்கொடி, மற்றும் துறைமுக அதிகாரசபையின் கொடி என்பன ஏற்றப்பட்டிருந்ததுடன்,இலங்கையின் தேசியக்கொடி ஏனைய கொடிகளை விட ஒன்றரை அடி உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது. எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையின் கொடியின் உயரம் குறைக்கப்பட்டு ஏனைய கொடிகளின் உயரத்துக்கு சமனாக கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.