இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளராக விஜய் கேஷவ் கோகலே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது செயலாளராக உள்ள ஜெய் ஷங்கரின் பதவிக்காலம் வரும் 28ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், சிரேஷ்ட ஐ.எப்.எஸ் அதிகாரியும், சீனாவுக்கான இந்திய தூதராகவும் உள்ள விஜய் கேஷவ் கோகலே புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1981-ம் ஆண்டு பட்ஜ் ஐ.எப்.எஸ் அதிகாரியான கேஷவ் கோகலே ஜெர்மனி மற்றும் மலேசியா நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். அத்துடன் இந்திய – தைபேய் அமைப்பின் இயக்குநர் ஜெனரலாகவும் பணிபுரிந்துள்ளார். ஜெய் ஷங்கர் விரைவில் தனது பொறுப்புகளை கேஷவிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது