கேரளாவுக்கு 25 கோடி ரூபா பெறுமதியான போதை பொருளை கடத்திச் சென்ற பிலிப்பைன்சைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் கேரளாவின் கொச்சி நெடும்பாஞ்சேரியில் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண்ணிடம் மத்திய போதை தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய வேளை அவர் வைத்திருந்த பயணப் பொதியிலிருந்து 40 கிலோ கொக்கைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணையில் குறித்த ம்பெண் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எனவும் கொச்சியில் உள்ள ஒரு நபருக்கு 1 கிலோவுக்கு 3 லட்சம் ரூபா தரகு என்ற அடிப்படையில் கொக்கைனை கடத்தி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். கேரளாவில் சமீபத்தில் சிக்கிய மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் இதுவாகும் என்று போதை தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.