பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக உணவு, புடவைப் பொருட்கள், இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு பெறுமதிசேர் வரியை சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக அரசுகள் அமுல்படுத்தியுள்ளன.
எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக அரசுகளின் வருமானத்தின் பெரும் பகுதி எண்ணெய் ஏற்றுமதி மூலமாக காணப்படுகின்ற நிலையில் வருமான வரி மற்றும் பொருட்களின் மீதான வரிகள் இந் நாடுகளில் இதுவரை காலமும் விதிக்கப்படவில்லை
இந்நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக உணவுப்பொருட்கள், துணிமணிகள், இலத்திரனியல் உபகரணங்கள் ,தொலைபேசி கட்டணம், தண்ணீர், மின்சாரக் கட்டணம்,; ஆகியவற்றுக்கு 5 சதவிகிதம் அளவுக்கு பெறுமதி சேர் வரி வரி இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த வரிவிதிப்பில் இருந்தது நிதி சேவைகள், பொது போக்குவரத்து மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பெறுமதி சேர் வரி மூலம் இந்த ஆண்டில் 3.3 மில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் வருமானம் கிடைக்கும் என ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது.