164
தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக ஒழுக்கக் கோவையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்ர்டுள்ளார். அரசியலமைப்பிற்கு உட்பட்டு, நியாயமானதும், பாரபட்சமற்றதுமான, தேர்தலை நடத்துவதற்கு இந்தப் பிரேனை அவசியம் என கருதப்படுகிறது.
அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில், அவர் குறித்த பிரேரணையில் பிரதமர் கைச்சாத்திட்டுள்ளார். அதற்கமைய இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தின், ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் அனுமதி பெறுவதன் மூலம் ஊடக நடைமுறைகள் சட்டபூர்வமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Spread the love