கடந்த வியாழக்கிழமை மும்பை கமலா ஆலை வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டு 14 உயிர்கள் உயிரிழந்தமை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என 18 வயது மாணவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய மும்பையில் அமைந்துள்ள கமலா ஆலை வளாகத்தில் விடுதிகள் பத்திரிகை அலுவலகங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களும் இந்த பல அடுக்கு கட்டடத்தில் இயங்கி வருகின்ற நிலையில் கடந்த வியாழக்கிழமை 6-ஆவது மாடியில் ஏற்பட்ட தீ ஏனைய இடங்களுக்கும் பரவியதில் இதில் 14 பேர் உயிரிழந்திருந்ததுடன் 16 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த தீவிபத்து அந்த வளாகத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதனை அடுத்து அந்த கேளிக்கை விடுதியின் மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். எனினும் கேளிக்கை விடுதியின் உரிமையாளர்கள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் படிக்கும் கர்வ் சூட் என்ற மும்பை நகர மாணவனே இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
கேளிக்கை விடுதியின் உரிமையாளர்களின் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தால் போதாது எனவும் இந்த தீவிபத்துக்கு கமலா ஆலைக் கட்டடத்தின் உ ரிமையாளர்களுக்கும் சம பங்கு உள்ளது எனவும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை எனவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.