இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தமது நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை பரிமாறிக் கொண்டுள்ளன. 1988-ம் ஆண்டு, கையெழுத்தாகிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தடை விதிக்கும் ஒப்பந்தம் 1991-ம் ஆண்டு அமுலுக்கு வந்திருந்தது.
இதன்படி இரு நாடுகளும் தத்தமது நாட்டில் உள்ள அணுமின் நிலையம் உள்ளிட்ட அணுசக்தி அமைப்புகளின் விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலாம் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் நேற்று 27-வது முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தமது நாட்டில் அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியலை பகிர்ந்துகொண்டுள்ளன. இந்தப் பரிமாற்றம், டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இரு நாட்டு தூதரகங்கள் வாயிலாக நேற்று ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளது.