166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தஸாநாயக்கவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தஸாநாயக்க உள்ளிட்ட மேலும் ஐந்து பேரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2008ம் மற்றும் 2009ம் ஆண்டுகளில் இந்த இளைஞர்கள் காணாமல் போயிருந்தனர்.
Spread the love