அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள பிரொன்க்ஸ் (Bronx) இல் உள்ள 12 அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டிடடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து சுமார் 200 தீயணைப்புப் படை வீரர்கள் தீயணக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில இந்த தீபவத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரொன்க்ஸ் கட்டிடம் என பெயரிடப்பட்டுள்ள அந்த குடியிருப்பு பகுதியில் 4 அடுக்கு மாடிகளைக் கொண்ட சுமார் 12 குடியிருப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
முதல் தளத்தில் இருந்த மரச்சாமான் கடையில் இருந்து தீப்பற்றியதாகவும் அது ஏனைய தளங்களுக்கும் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட 19 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அண்மையில் நியூயோர்க் நகரில் 3 வயது குழந்தை ஒன்று விளையாட்டாக மூட்டிய தீயினால் ஏற்பட்ட தீ விபத்து 12 பேரர் பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது