குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் அண்டி மரே மீளவும் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். உபாதை காரணமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரிஸ்பர்ன் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் மரே பங்கேற்கவில்லை. இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதையே மரே போட்டித் தொடரில் பங்கேற்காமைக்கான காரணமாகும். மரே ஏற்கனவே உபாதை காரணமாக சில போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரிலும் மரே பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடர் ஆரம்பமாக முன்னதாக தம்மால் உபாதையிலிருந்து மீள முடியும் என எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.