162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நாரஹேன்பிட்டியில் நான்கு பேரும், கொட்டாஞ்சேனையில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தனித் தனியான தேடுதல் வேட்டைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 30, 50, 11, 20 மற்றும் 3 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
Spread the love