உலகம் பிரதான செய்திகள்

பெருவில் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 36 பேர் பலி


பெருவின் தலைநகரான லீமா நகருக்கு அண்மையில் உள்ள கடற்கரை நகர் ஒன்றில் 57 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எதிரே வந்த வாகனமொன்றுடன் மோதியதனைத் தொடர்ந்து 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து வீழ்ந்து  ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு சென்ற மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் பள்ளத்தில் இருந்து மக்களை மீட்பது சிரமமாக இருந்ததனால் உலங;குவானூதியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது .   அத்துடன் பலர் காயமடைந்த நிலையில்   மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.