நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று இடம்பெற்ற தற்கொலை படை தாக்குதலில் தீவிரவாதி உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். மசூதியில் இன்று அதிகாலை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாக மசூதி முழுவதும் எரிந்து அழிவடைந்துள்ளதாகவும் மசூதிக்கு அருகில் உள்ள சில கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்ற போதிலும் போகோ ஹராம் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நவம்பரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.