குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போதைய அமைச்சரவை அரசியல் சாசனத்திற்கு அமைவானதல்ல என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை கலாவதியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் 19ம் திருத்தச் சட்டத்தின் 46ம் சத்தின் அடிப்படையில் தற்போதைய அமைச்சரவை சட்ட ரீதியற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் தேசிய அரசாங்கம் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டிருந்த உடன்படிக்கை கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் கலாவதியாகியுள்ளது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இது சட்ட விரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.