´எனது கத்தியில் யார் வெட்டப்படுகிறார்கள் என்பது தெரியாது´ என்று ஜனாதிபதி சொன்னார். ஆனால் அவரது கத்தியால் ரணில் வெட்டிப்படவில்லை. அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்கு ஜே.வி.பி. சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு, நாவற்குழி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அவர்,
ரணில் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் மக்களுக்கு தெரியும் யார் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கை சொல்கிறது. அதில் 11 கோடி ரூபா சூரையாடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரணில் தொடர்பில் அவரை நியமித்தது தொடர்பாக மட்டுமே கூறப்பட்டுள்ளது எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.