குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவினை வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு செய்யப்பட்டுள்ள பரிந்துரை அமுல்படுத்தப்பட வேண்டுமென்பதே கட்சியின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடியினால் பாரியளவு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அர்ஜூன மகேந்திரனது நியமனம் தவறல்ல என, ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளமை தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, பிரதமருக்கு எதிராக சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றது எனவும் அஜித் பி பெரேரா கூட்டிக்காட்டியுள்ளார்.