இந்தியாவின் பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றான தாஜ்மகாலைப் பார்வையிட நாள் ஒன்றுக்கு 40ஆயிரம் பேருக்கு மாத்திரமே இனி அனுமதி வழங்கப் போவதாக உத்திரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை பார்வையிடுவதற்காக தினமும் இலட்சக் கணக்கானோர் வருகை தருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
இந்நிலையில், தாஜ்மகாலை பார்வையிட வருகை தருபவர்களில் ஒரு சிலர் அதனை அசுத்தப்படுத்துவதாகவும், அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் உத்திரப் பிரதேச அரசின் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் தாஜ்மகாலைக் காண வரும் பயணிகள் எண்ணிக்கையை மட்டுப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்து உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும், ஜனவரி 20ஆம் திகதியில் இருந்து தினமும் 40 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.