குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாவீரர் துயிலுமில்லங்களை மீட்டு, அவற்றை வணக்கஸ்தலங்களாக மாற்றுவோம் என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி அமைப்பளரும் முதன்மை வேட்பாளருமான தங்கவேல் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று முற்ப்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லமானது, தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டு பெயர்ப்பலகை நாட்டப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். துயிலுமில்லத்தை பூங்காவாக மாற்றும் செயலானது கபட நோக்கம் கொண்டது எனவும் , எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதேச சபையை கைப்பற்றியதன் பின்னர் கனகபுரம் துயிலும் இல்லத்தை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க வழி செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இடைக்கால அறிக்கையின் அங்கீகாரமாக இத் தேர்தல் வெற்றி பார்க்கப்படப் போகின்றது எனவும் நீங்கள் யாருக்கு வாக்களிக்கின்றீர்களோ அவர்கள் கொண்டுள்ள கொள்கை இடைக்கால சீர்திருத்தத்தின் மீது கொண்டுள்ள கொள்கையாகப் பார்க்கப்பட இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.