அந்நிய செலாவணி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் அவரை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுவிட்டு அதனை செலுத்தாமல் இங்கிலாந்தில் தங்கியுள்ளார். இந்தநிலையில் இங்கிலாந்து நிறுவனத்துக்கு 2 லட்சம் டொலர்களை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாக அவர் மீது அமுலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து இருந்தது.
இந்த வழக்கு டெல்லியில் உள்ள உயர்நீதிமன்றில் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்காக முன்னிலையாகுமாறு பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவர் முன்னிலையாகவில்லை.
இறுதியாக காலஅவகாசம் வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள்ளும் அவரோ அல்லது அவரது சார்பில் சட்டத்தரணியோ முன்னலையாக காரணத்தினால் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.