பிரிஸ்பேன் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதி ஆட்டத்தின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஜோகானா கொன்ரா (Johanna Konta) விளையாட்டில் இடையிலேயே வெளியேறியுள்ளார். பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான காலிறுதி ஒன்றில் பிரித்தானியாவின் முதலாம்தர வீராங்கனையான ஜோகானா கொன்ரா , எலினா ஸ்விடோலினா (Elina Svitolina) வை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 1-6 என இழந்த 2-வது செட்டை 7- 6 எனும் ; கணக்கில் வென்றார். எனினும் 3-வது செட் ஆரம்பமாவதற்கு முன் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியின் இடையிலேயே விலகியுள்ளார். இந்தநிலையில் காயம் காரணமாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள சிட்னி சர்வதேச தொடரில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Elina Svitolina of Ukraine plays a shot in her quarter final match against Johanna Konta of Britain during the Brisbane International tennis tournament in Brisbane, Australia, Thursday, Jan. 4, 2018. (AP Photo/Tertius Pickard)