ரம்யா கிருஷ்ணன் கமல்ஹாசன் போன்று வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் எனவும் இவரை என்று கூறலாம் எனவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதே விக்னேஷ் சிவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் பேசிய விக்னேஷ் சிவன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் தானா சேர்ந்த கூட்டம் சிறப்பாக உருவாகுவதற்கு முக்கியமான காரணம் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர் ஏனைய விஷயங்களை படத்தில் பாருங்கள் எனத் தெரிவித்துள்ளார். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம் எனவும் தற்போது வரை தனது படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை ஒரு முக்கிய பங்காற்றி இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அங்கு உரையற்றிய கீர்த்தி சுரேஷ் சஞ்சய் ராமசாமியை பார்த்து நான் வழிஞ்சிருக்கிறேன் எனவும் இன்று அவருடன் சேர்ந்து நடித்துள்ளேன் எனவும் இது எனக்கு கிடைத்த பாக்கியம் எனவும் சூர்யா சாருடன் சேர்ந்து நடித்தது எனக்கு பெரிய விஷயம் எனவும் தெரிவித்துள்ளார்