இந்தியாவின் உத்தரபிரதேசத்தில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும், இஸ்லாமியர்கள் தங்கும் விடுதிக்கும், காவி நிற பூச்சு பூசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதிலிருந்து இந்து மத அடையாளங்களை மாநிலம் முழுவதும் நிரப்புவதில் அவர் ஈடுபாடு காட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் லக்னோவில் உள்ள ஹஜ் தங்கும் விடுதியின் சுவர்களுக்கு காவி நிறத்தில் பூச்சு பூசியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் ஆன்மீக நிறமாக கருதப்படும் காவி நிறத்தினை இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் விடுதிக்கும் பயன்படுத்தியன் மூலமாக மனரீதியாக மத காழ்ப்புணர்ச்சிகளை மக்கள் மனதில் அவர் விதைப்பதாக எதிர்க்கட்சியினர் யோகி மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
எனினும் இவை எதனையும் கருத்தில் எடுக்காத யோகி, உத்தரபிரதேசத்தையே காவி நிறத்தில் மாற்றும் பணியில் தீவிரவாக ஈடுபட்டு வருவதாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. எப்போதும் காவி உடையில் காட்சிதரும் யோகி உத்தரபிரதேசத்தையே காவிமயமாக்குவார் என என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மதரஸாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்துள்ள யோகி, ஹஜ் விடுதியின் மீது காவி நிறம் பூசியுள்ளமை இஸ்லாமியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.