புத்தளம் தில்லையடி அல் காஸிம் நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் சுமார் 500 வீடுகள் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் பாழடைந்து காணப்படுவது தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய அரசாங்கத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக இருக்கும் றிசாட் பதியுதீனால் சுமார் 1000 வீடுகள் இப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. இவையாவும் மத்தியகிழக்கு நாடுகளின் நிதி உதவியுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்தப் பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்ட, சுமார் 500 இற்கும் அதிகமான வீடுகள், மனிதப் பாவனையற்று பாழடைந்த நிலையிலும், சேதமுற்ற நிலையிலும் காடுகளால் மூடப்பட்ட நிலையிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிடைக்கப்பெற்ற மேலதிக தகவல்களின் அடிப்படையில, அந்த வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த வீடுகள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வெளிப்படையாக பெசுவதற்கு பிரதேச மக்கள் அச்சப்படுகின்ற நிலையில், இந்தக் கிராமத்தில் வீடுகளை வைத்திருக்கும் மக்களுக்கு வில்பத்து காட்டின் விலாத்திகுளம் காட்டை அழித்து வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட விலாத்திகுளம் காட்டுப் பகுதியை சட்டவிரோதமாக அழித்து மக்களை குடியேற்றுவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை எடுத்திருப்பது, அண்மையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கணக்காய்வு அறிக்கை மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வில்பத்து விலத்திக்குளம் சட்டவிரோத காடழிப்பு – ரிஷாத் பதியுதீனின் தலையீடு உறுதி செய்யப்பட்டுள்ளது:-