குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் உளநலச்சுகாதாரம் பற்றி தாம் கேள்வி எழுப்பியதில்லை என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்சன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி ட்ராம்ப் தொடர்பில் வெளியான நூல் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியின் உளச் சுகாதாரம் பற்றி கேள்வி எழுப்பியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் ஜனாதிபதியுடன் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மைக்கல் வொல் என்பவரின் பயர் என் ப்யுரி என்ற நூலில், ட்ராம்பின் அதிகாரிகள் அவரை குழந்தையாகவே பார்க்கின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் விற்பனை செய்யப்படுவதனை தடுக்க டராம்ப் முயற்சி எடுத்து போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது