குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணை அறிக்கை தொடர்பில் துரித கதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்டரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து நேற்றைய தினம் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
முழு அறிக்கையும் வெளியிடப்பட்டதன் பின்னர் நிதிச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2008ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறித்த காலத்திலான மத்திய வங்கியின் ஆவணங்களை பேணிப் பாதுகாப்பது அவசியமானது எனவும் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.