குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரச சொத்துக்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல் காரணமாக அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்றாட நடவடிக்கைகள் எதுவும் கைவிடப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்றைய தினம் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். புத்தாண்டுக்கான அபிவிருத்தி இலக்குகள் வருட ஆரம்பத்திலிருந்தே அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.