மியான்மரில் ராணுவ வாகனம் மீது ரோஹிங்கியா போராளிகள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தல் மேற்கொண்டதில் இராணுவத்தின் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் இடம்பெறும் இராணுவ ஒடுக்குமுறைக்கு அஞ்சி சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். குறித்த புலம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் ராக்கின் மாகாணத்தில் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனத்தின் மீது இன்று ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் ராணுவ வாகனம் மீது ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் ….
144
Spread the love