தவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தால் 3 ஆண்டுகள் விளம்பரங்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கும் புதிய மசோதாவுக்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்கள் பல வகையான விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் பல விளம்பரங்கள் தவறாக வருவததனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனால் நுகர்வோர்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டள்ளது.
குறித்த மசோதாவினை ஆராய்ந்த நாடாளுமன்றக் குழு தவறான விளம்பரங்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமாப்பித்திருந்தது. அதன்படி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்தவகையில் இந்த புதிய சட்டத்தின்படி தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
அதே வேளை தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு சிறைத்தண்டனை தண்டனை விதிக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்க்கது.