வல்வெட்டித்துறை மயிலியதனை கடற்கரை பகுதியில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து மீட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு பெருமளவான போதை பொருட்கள் கடல் வழியாக கொண்டு வரபட்டு அவை கடற்கரையை அண்மித்த பற்றைக்காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக கடற்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை தேடுதல் நடத்தப்பட்டது.
அதன் போது மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் , 88 கிலோ கேரளா கஞ்சா , 4 கிலோ அபின் மற்றும் 4 கிலோ ஹசஸ் ஆகிய போதை பொருட்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட போதை பொருளின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டு உள்ளது.
போதை பொருளை கடத்தி வந்த நபர் தொடர்பிலும் அவற்றை கொள்வனவு செய்வதற்கு தயராக இருந்த நபர் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்க பெற்று உள்ளதாகவும் , அவை தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கபட்டு உள்ளதாகவும் , சாட்சியங்களின் அடிப்படையில் அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
போதை மயமாகும் வல்வெட்டித் துறை கடல் பரப்பு…
Jan 6, 2018 @ 11:55
வல்வெட்டித் துறை கடல் பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 90 கிலோகிராம் கேரள கஞ்சா, 4 கிலோகிராம் ஹஸிஸ் மற்றும் 4 கிலோகிராம் அபீன் அடங்குவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.