இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட கடுங் குளிர் காரணமாக இதுவரை உத்தரபிரதேசத்தில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் 2.1 டிகிரி செல்சியஸ் வரையிலும் தரைப்பகுதிகளில் 5 டிகிரி வரையிலும் குளிர் நிலவுகின்றது. இமாச்சலப்பிரதேசத்தில் இரவு நேரங்களில் குளிர் 1 டிகிரி செல்சியஸ் வரை செல்கின்ற நிலையில் இது மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்குவதற்கு வீடுகள் இன்றி வெட்டவெளியிலும் வீதிஓரங்களிலும் தங்கும் ஏழைகளின் நிலை மிகவும் மோசமாகி உள்ளதெனவும் இந்த ஆண்டு கடும் குளிருக்கு உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுவரை சுமார் 70 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
வீடற்றவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் அரசாங்கம் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதுடன் தீ மூட்டி குளிர் காய்வதற்காக விறகுகளையும் இலவசமாக விநியோகிக்கின்றதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவும் ஏழைகளுக்காக வழங்கப்படும் விறகுகள் லக்னோவின் அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விடுவதாக பு குற்றச்சாட:டக்கள் எழுந்துள்ளமையினால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரவு நேரங்களில் அரசு கூடாரங்களுக்குச் சென்று திடீர் சோதனை நடத்தி வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வரும் 10-ம் திகதிக்கு பிறகு குளிர் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையத்தினர் கருதுகின்றனர்.