146
திருகோணமலை – கந்தளாய் – பேராறு பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரின் கிளைக் காரியாலயம் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளமதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான காரியாலயம் கந்தளாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பேராறு கிழக்கு பத்தாம் வட்டார வேட்பாளருமான என்.எம்.கே.சுபார்கான் என்பவருடையது எனவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love