152
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு முன்னர், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இவருடன், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என, அவர் தெரிவித்துள்ளார். எனினும், பிணை முறி மோசடி சம்பவத்தில் இருந்து பிரதமர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love