206
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு நிதிஉதவி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு இந்த அரசு முயற்சிக்கும். என தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியுள்ளார்.
Spread the love