சிரியாவின் வடமேற்கு பகுதியில் போராளிகள் வசமுள்ள இட்லிப் நகரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 பொதுமக்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராளிக் குழுவின் தலைமையிடத்தில் இந்தக் குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பிரித்தானியாவினை மையமாகக் கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குல் இடம்பெற்ற கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து இறந்தவர்களையும், காயமடைந்தவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு காரணம் தெரியவில்லை எனவும் தாக்குதலுக்கு எந்த அமைப்பு உரிமை கோரப்படவிலலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
துருக்கி எல்லையில் அமைந்துள்ள இட்லிப் மாகாணம், ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தை எதிர்க்கும் போராளிகள் வசமுள்ள இறுதி முக்கிய கோட்டைகளில் ஒன்றாகும்.