குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அலரி மாளிகையை தேர்தல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பிரதமரின் செயலாளரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கல்வி அமைச்சினால் அலரி மாளிகையில் நடத்தப்பட்ட நிகழ்வு அரசியல் பிரச்சார நோக்கிலானது என சுட்டிக்காட்டியுள்ளது.
அலரி மாளிகை பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் எனவும், இங்கு தேர்தல் பிரச்சாரம் நடாத்த இடமளிக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திலும் அலரி மாளிகை தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. தற்பொதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தை பி;ன்பற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்