கேப் டவுனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 72 ஓட்ட வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றியீட்டியுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இடையிலான முதல் டெஸ்ட போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 286 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.ஆரம்பித்த இந்திய அணி 209 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முதல் இன்னிங்சில் 77 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்த தென்னாபிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 207 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 208 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தநிலையில் இரண்டாவது இந்தியா 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 135 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனால் தென்னாபிரிக்கா 72 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. பிலாண்டர் ஆட்ட நாயகனாக தெரிவி செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட போட்டி செஞ்சூரியனில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற்வுள்ளமை குறிப்பிடத்தக்கது