குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் தனது 92ம் வயதில் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மலேசியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மஹதிர் மொஹமட்டை களமிறக்குவதற்கு எதிர்க்கட்சிகள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளன. கடந்த 2003ம் ஆண்டு மஹதிர் மொஹமட், பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொண்டிருந்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹதிர் வெற்றியீட்டினால் உலகின் வயது முதிர்ந்த அரச தலைவர்களில் ஒருவராக வரலாற்றில் இடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பிரதமர் நாஜீப் ரசாக் பல்வேறு மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் காரணமாக மீளவும் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கு முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது