குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை தணிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் மூலம் முயற்சிக்க வேண்டுமென பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரேற் ஒப் த வேல்ட் ( state of the world ) வருடாந்த உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை தணிப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணுவாயுத பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கொரிய மக்களுக்கும் உலக வாழ் மக்களுக்கும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் பரஸ்பர புரிந்துணர்வுடன் பேச்சுவார்த்தைகளின் மூலம் காத்திரமான தீர்வுத் திட்டங்களை எட்டுவதற்கு முனைப்பு காட்ட வேண்டியது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணுவாயுதங்கள் கட்டாயம் தடை செய்யப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார்.