அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் வீதி அமைக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் இந்திய எல்லைப் பகுதியான டோக்லாம் பகுதியில் 4 மாதங்களுக்கு முன் சீன ராணுவம் ஊடுருவியதனை அடுத்து அப்பகுதியில் இந்தியாவும் படைகளைக் குவித்ததால் பதற்றம் நிலவியது.
இதன்பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து சீன ராணுவம் படைகளை வாபஸ் பெற்றுவருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் டியூட்டிங் பகுதிக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவத்தினர் அண்மையில் ஊடுருவி அங்கு வீதி அமைக்க முற்பட்டடிருந்தனர். இதனை அறிந்த இந்திய ராணுவத்தினர் அங்கு சென்ற நிலையில் வீதிப் பணிக்காக கொண்டு வந்த பொருட்களை விட்டுவிட்டு சீன ராணுவத்தினர் சென்றதாக செய்தி வெளியானது. இந்நிலையிலேயே அருணாச்சலில் இந்தியா – சீனா ராணுவத்தின் சார்பில் எல்லை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 2 நாட்களுக்கு முன் இடம்பெற்றதாகவும் இதன் போது அருணாச்சல் எல்லையில் வீதி அமைப்பதில்லை என சீனா உறுதி அளித்துள்ளது எனவும் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளர்h.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் மேலும் சீனா ராணுவத்தினரிடம் கைப்பற்றப்பட்ட வீதிப்பணிக்கான இயந்திரங்கள் அந்நாட்டிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளர்.