இணையவழி அச்சுறுத்தல்களுக்கு காவல்துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். மத்தியபிரதேசத்தில் உள்ள தேகன்பூரில் இடம்பெற்ற காவல்துறை இயக்குநர்களின் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கணினிமயமான இந்த உலகில், இணையவழி அச்சுறுத்தல் என்பது ஒரு தனிநபர் மட்டுமின்றி உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக மாறியிருக்கிறது. இது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும். எனவே, இணையவழி அச்சுறுத்தல்களுக்கு காவல்துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுடன் அதுதொடர்பாக விரைவான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல், இளைஞர்களை இணையவழியில் தீவிரவாதத்தின் பாதைக்கு கொண்டு செல்வதையும் தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர் பாதுகாப்பு விவகாரங்கள், கறுப்புப் பணம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதில் உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளர்h.