பிரித்தானியாவின் பல நகரங்களில் ஆசி வைரஸ் எனப்படும் ஓர் வைரஸ் காய்ச்சல் தாக்கம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கத்தினால் பாடசாலை சிறுவர்களும் இளைஞர் யுவதிகளுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பிரித்தானிய பாடசாலைகளில் இந்த ஆசி ப்ளு வைரஸ் தாக்கம் பன்மடங்காக உயர்வடைந்துள்ளது. பிரித்தானியா முழுவதிலும் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கம் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லண்டன் நகரமும், டோரஸ்டின் டோர்செஸ்டர் நகரமுமே இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்படாத நகரங்களாகும். இந்த வைரஸ் தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் தேவாலயங்களில் ஒருவருக்கு ஒருவர் கைலாகு செய்வதனைக்கூட தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் சுமார் 4.5 மில்லியன் பேர் ஆசி ப்ளு ரைவஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இணைய கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த காய்ச்சல் தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய 30 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் இதுவைரயில் பிரித்தானிய மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 252 பேர் ஆசி வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
குளிர்காலத்தில் இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஆசி ப்ளு வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்வது சிறந்த வழிமுறையாகும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எச்3என்2 என்ற வைரஸ் காய்ச்சலே தற்போது ஆசி ப்ளு என அழைக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு இந்தக் காய்ச்சல் மிக மோசமாக தாக்கியிருந்தது, இந்த ஆண்டில் அந்த நிலைமை பிரித்தானியாவை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இள வயதினரையும் வயது முதிர்ந்தவர்களையும் இந்த வைரஸ் காய்ச்சல் அதிகம் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த காய்ச்சல் தொற்றும் அநேகமானவர்களுக்கு ஏழு நாட்களுக்குள் குணமடைந்து விடும் எனவும், அதிகளவு நீராகரம் பருக வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், மிகவும் இள வயதினர் மற்றும் மிகவும் வயது முதிர்ந்தவர்கள் இந்த வைரஸ் தாக்கதினால் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
Aussie flu என்ற காய்ச்சல் பிரித்தானியாவில் பரவி வரும் நிலையில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்த எச்சரிக்கையை பிரித்தானியாவின் அரசு சாரா சுகாதார மையமான NHS வெளியிட்டுள்ளது.
நாட்டில் உள்ள மருத்துவமனைகள் காய்ச்சலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதோடு Norovirus என்னும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் வைரஸும் நாட்டில் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது.
Aussie flu ஏ மற்றும் பி என இருவகைப்படும், இதில் ஏ வகை வைரஸுக்கு H3N2 என்ற பெயர் உள்ள நிலையில் அதுதான் இந்தாண்டு பிரித்தானியாவில் பரவி வருகிறது.
இதே வைரஸால் முன்னர் அவுஸ்திரேலியா பாதிப்படைந்த நிலையில் தற்போது பிரித்தானியா பாதிப்படைந்துள்ளது.
இதுகுறித்து சுவாச நோய்கள் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பிபோடி கூறுகையில், அவுஸ்திரேலியாவில் H3N2 காய்ச்சலால் அதிகம் பேர் உயிரிழந்தார்கள், முதியவர்களை தான் இந்த காய்ச்சல் அதிகம் தாக்குகிறது.
பொதுவான அறிகுறிகள்
அதிக காய்ச்சல்
உடல் வலிகள்
உடல் சோர்வு தான்
தலைவலி, வறட்டு இருமல்
தடுப்பூசி போட்டு கொள்வதே காய்ச்சலிலிருந்து தப்பிக்க சிறந்த வழியாகும்.
காய்ச்சல் குறித்து தெளிவுப்படுத்த NHS கர்ப்பிணி பெண்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்ப்பட்டோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறது என கூறியுள்ளார்.
காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட,
நல்ல ஓய்வும் தூக்கமும் அவசியம்
உடல் வறட்சியை தடுக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், சிறுநீர் இள மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
உடல் வெப்பநிலை மற்றும் வலிகளை குறைக்க paracetamol அல்லது ibuprofen மாத்திரைகளை சாப்பிடலாம்.