இந்தியாவின் கர்நாடகாவில் இஸ்லாமிய ஆண் ஒருவருடன் நட்பு கொண்டிருந்ததால் தொடர்ந்து வந்த இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான குறித்த பெண், தனது நண்பர் ஒருவரிடம் நான் இஸ்லாமியர்களை நேசிக்கிறேன் என வட்ஸ் அப்பில் தெரிவித்ததனைத் தொடர்ந்து அவர் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வட்ஸ் அப் உரையாடலின் ஸ்க்ரீன்ஷொட் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து கடும்போக்குவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கடந்த சனிக்கிழமையன்று அந்த இஸ்லாமிய ஆணுடன் நட்பு கொண்டிருப்பதை தடுக்குமாறு அவரது பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்க அவரது வீட்டுக்குச் சென்ற அன்றைய தினமே அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முதலில் அவரது மரணம் குறித்து தற்கொலை வழக்கு பதிவு செய்திருந்த காவல்துறையினருக்கு, விசாரணைக்குப் பின்னரே அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதில் சமூக வலைத்தளங்களுக்கு உள ளபங்கு தெரிய வந்துள்ளது. வேறு ஒரு மதத்தை சேர்த்த நபருடன் தான் எடுத்துள்ள படம் பகிரப்படுவதாகவும், தனது நடத்தை குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும், அப்பெண் தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் ஒரு இஸ்லாமிய ஆணுடன் காதல் கொண்டிருப்பதாக ஐந்து ஆண்கள் தனது தாயாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளமையினால் தான் தற்கொலை செய்வதாகவும் அவர் அந்தக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நால்வரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது