173
இந்துக்களின் மத உணர்வை புண்படும் வகையில், ஆண்டாள் குறித்து பேசிய விடயம் தொடர்பில் தமிழகத்தின் பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.கடந்த 7ஆம் திகதி தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து எழுதிய கட்டுரையை வெளியிடும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய வைரமுத்து, ஆண்டாள் குறித்து அமெரிக்காவின் தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் சுபாஷ் சந்திரமாலி என்பவர் எழுதிய நூலை மேற்கொள் காட்டிப் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தன்நிலை விளக்கம் அளித்த வைரமுத்து, அந்த குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள கருத்துக்களை முன்வைத்தே தான் பேசியதாகவும், அந்த கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்
Spread the love