குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினைககு இஸ்ரேல் தீர்வு காண வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆபிரிக்காவிலிருந்து இஸ்ரேலில் தஞ்சமடைந்துள்ள ஆபிரிக்க பிரஜைகளை பலவந்தமாக மீளவும் நாடு கடத்தக் கூடாது என கோரியுள்ளது.
மாறாக இவ்வாறான புகலிடக் கோரிக்கையாளர்களை ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளில் குடியேற்ற முடியும் என தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள ஆபிரிக்கப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும், அவ்வாறு பிடிபடுவோர் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் அண்மையில் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.
எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் ஆபிரிக்கப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்ப விரும்பும் ஆபிரிக்க பிரஜைகளுக்கு 3500 அமெரிக்க டொலர் பணமும், விமானப் பயண டிக்கட்டையும் இஸ்ரேல் அரசாங்கம் வழங்க உள்ளது.
எரித்திரியா, சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மீளவும் திரும்பி அனுப்பி வைக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.