146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை ஒரு வார காலத்தில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு வார காலத்திற்குள் இந்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love