குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையின்றி விவாதம் நடத்துவதில் அர்த்தமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
விவாதம் நடத்தப்படுவதற்கு முன்னதாக இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடி தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் அறிக்கை இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விவாதம் கோரிய காரணத்தினால் இவ்வாறு விவாதம் வழங்கியதாக அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல பதிலளித்துள்ளார்.