160
கிளிநொச்சியில் இன்று(10) காலை கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற பேரூந்து தரிப்பிட கட்டத்திற்குள் சிசு ஒன்று இருப்பதனை அவதானித்த பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சிசு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிசுவை இவ்வாறு கைவிட்டு சென்ற பெற்றோர் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Spread the love