சட்டசபை உறுப்பினர்களின். சம்பள உயர்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் இன்று சட்டசபை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதாவை பேரவையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார். அதன்படி சட்டசபை உறுப்பினர்களின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா நிறைவெறினால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் வரையிலான மூன்று லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை கிடைக்கும்.
இந்நிலையில், குட்கா விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்ப ஸ்டாலின் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளார். இதை கண்டித்தும், சட்டசபை உறுப்பினர்களின சம்பள உயர்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.