இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வைத்தியர் மாரிராஜும் நோயாளிகளுக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார். பேராசிரியர்களால் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும், நாற்காலியை விட்டு எழ கட்டாயப்படுத்தப்பதாகவும், சக மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தேநீர் வழங்குமாறு கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் பி.ஜே மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாரிராஜ். சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் ஒரு பகுதி இது எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ், 2015-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தது முதல் சாதிய பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகத் தெரிவித்து மருத்துவமனையில் பணிபுரியும் 9 மருத்துவர்களுக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
சாதி, பிராந்தியவாதம் மற்றும் மொழி தொடர்பான பாகுபாட்டினால் தான் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மாரிராஜ், தமிழகத்திற்குத் திரும்ப சென்று படிப்பை தொடர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த மாரிராஜ், முதுகலைப் படிப்புக்கு தனக்கு இந்தியாவில் உள்ள எந்த கல்வி நிறுவனத்தில் இருந்தும் அனுமதி கிடைத்திருக்கும் எனவும், ஆனால் குஜராத்தில் படிக்கவே தான் விரும்பியதாவும் எனினும் தற்போது தமிழகம் செல்ல விரும்புவதாகவும் என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை அறையில் தனியாக அமர்ந்திருக்கும் மாரிராஜ் ஜனவரி 5-ம் திகதி பேராசிரியர்களும், மாணவர்களும் தன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்p சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதி மற்றும் பிராந்தியம் காரணமாகத் தனது தகுதிக்கு அடிப்படையான பணியை ஒதுக்கவில்லை எனவும் மாரிராஜ் தெரிவித்துள்ளார் . இதேவேளை மாரிராஜ் படிக்கும் துறையின் தலைவர் வைத்தியர் பிரசாந்த் மேத்தா, இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளார் ‘கடந்த இரண்டு மாதங்களாக அவர் தன்னுடன் இருக்கிறார் எனவும் அவருடன் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்களுடன் பணியாற்றுகிறார்கள் எனவும் யாரும் இது போன்ற பிரச்சனையை எதிர்கொண்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
ஜனவரி 5-ம் திகதி ஒரு அறுவை சிகிச்சை செய்ய மாரிராஜ் கோரிக்கை வைத்தார் எனவும் இத்துறையின் தலைவரான தன்னால், ஒரு மாணவர் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்த மேத்தா கடந்த இரண்டு வருடங்களாக 22 அறுவை சிகிச்சைகளில் அவர் பங்கேற்றுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாரிராஜ் அளித்துள்ள புகாரில் டாக்டர் மேத்தா பெயரும் இடம்பெற்றுள்ளது. சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்று வருவதாகவும் போதிய ஆதாரங்கள் பெற்ற பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்வோம் என எஃப் டிவிஷன் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் காடியா தெரிவித்துள்ளர்h.
அகமதாபாத் அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியாக பி.ஜே மருத்துவக் கல்லூரி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய மருத்துமனை என கூறப்படும் இந்த மருத்துவமனையில் கல்லூரி, குஜராத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
தன் மீதான பாகுபாடு குறித்து 2015-ம் ஆண்டே மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் எனவும் ‘பாகுபாட்டை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மாரிராஜ் தெரிவித்துள்ளார். தான் மூன்றாம் ஆண்டு மாணவன் என்பதனால் சிரேஸ்ட மருத்துவர்களுடன் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் தான் எப்போதும் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு அடிமையாக நடத்தப்பட்டேன் எனவும் அறுவை சிகிச்சை அரங்கிற்கு வெளியே காவலாளி போல நிற்க கட்டாயப்படுத்தப்பட்டேன் எனவும் தெரிவித்த அவர் தன்னைத் தவிர அனைத்துப் பயிற்சி மருத்துவர்களும் கருத்தரங்க வகுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டனர் எனவும் மாரிராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 5-ம் திகதிp முதல் தான் கிசிச்சை பெற்று வருவதாகவும், திங்கட்கிழமை முதல் தனக்கு சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் நிறுத்திவிட்டனர் எனவும் தெரிவித்த அவர் தனக்குச் சிகிச்சையும், உணவும் கொடுக்கப்படவில்லை எனவும் இங்கு பணியில் இருக்கும் காவல்துறையினரே உணவு ஏற்பாடு செய்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளர்h.
தன் மகனுக்கு நிகழ்த்தப்பட்ட பாகுபாடு குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரிராஜின் தாயார் இந்திரா முறை;பாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
மூலம் பிபிசி